சீனாவில் முகமூடியை அதிக விலைக்கு விற்ற கடைக்கு ரூ.3 கோடி அபராதம்
சீனாவில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அணியும் முகமூடிகளை மிக அதிக விலைக்கு விற்றதாக மருந்துக் கடை ஒன்றுக்கு 4,34,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும்பொருட்டு முகமூடிகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆன்லைனில் இந்திய மதிப்பில் ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு பாக்ஸ் முகமூடிகளை பீஜிங்கில் உள்ள மருந்துக் கடை ஒன்று, 8,700 ரூபாய்க்கு விற்றதாக புகார் எழுந்தது.
கடையில் ஆய்வு செய்து இதை உறுதி செய்த அதிகாரிகள், இந்திய மதிப்பில் சுமார் 3.08 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், கடந்த 6 நாட்களில் அதிக விலைக்கு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை விற்றதாக 31 புகார்கள் பதிவாகியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments