மக்கும் - மக்காத குப்பைகளை பிரித்துக்கொடுக்கும் பொதுமக்கள்
சென்னையை அடுத்த பம்மல் நகராட்சியில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்துக்கொடுப்பவர்களுக்கு வெகுமதி வழங்கும் திட்டத்தால் பொதுமக்கம் ஆர்வத்துடன் பிரித்துக்கொடுக்கிறார்கள்.
21 வார்டுகளில் சுமார் 90ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நகராட்சியில், சுமார் 8 ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 200 துப்புரவு பணியாளர்கள், காலையில் வீடு வீடாக சென்று குப்பை சேகரித்து வருவதுடன், மக்கும் மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்குமாறு ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுப்பதால், பொதுமக்கள் அதுபோல் பிரித்து வழங்குகிறார்கள்.
அவர்களுக்கு வீட்டு தோட்டம் வைப்பதற்கான இயற்கை உரங்கள், மற்றும் உரங்களால் தயாரிக்கப்பட்ட பென்சில் உள்ளிட்ட வெகுமதிகள் வழங்குவதால் பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
அப்பகுதியில் குப்பை கொட்டாதீர்கள் என பதாகைகள் வைத்தும், வண்ண பவுடர்களால் கோலமிட்டு எழுதியும் வைத்துள்ளதால் நகராட்சிப்பகுதி தூய்மையாக காணப்படுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்
Comments