உணவு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்..! விரைந்து மீட்க இந்திய மாணவர்கள் கோரிக்கை
கையிருப்பு உணவு, குடிநீர் தீர்ந்து வருவதால், தங்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய அரசுக்கு சீனாவின் உகான் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர்கள் 8 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உகான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அசாம், டெல்லி, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 8 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் உகான் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களிடம் உள்ள உணவு, தண்ணீர் தீர்ந்து வருவதாகவும், ஆதலால் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கும்படியும் இந்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என சீனாவிலுள்ள இந்தியத் தூதரகம் உறுதியளித்துள்ளது.
Comments