கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் அமெரிக்கா

0 1483

100க்கும் மேற்பட்ட மனித உயிர்களை பறித்துள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரித்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம், முதற்கட்ட பரிசோதனைகளை செய்து விளைவுகளை ஆராய 6 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.

image

முதற்கட்ட பரிசோதனை வெற்றியடையும் பட்சத்தில் அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளை பயோடெக் நிறுவனமான மாடர்னா(Moderna) மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புகளை தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய தங்கள் நிபுணர்கள் குழு தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கொரானா வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரித்து வருவதாக பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments