பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிக்கு தாமதமாக வந்த 347 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு தேன்கனிக்கோட்டையை கல்வி மாவட்ட அலுவலர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைப்பதிவை கண்காணிப்பதற்காக பயோ மெட்ரொக் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வராத பணியாளர் மற்றும் ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 347 பேர் தாமதமாக வந்தது கண்டறியப்பட்டு அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
Comments