தமிழகத்தில் 240 புதிய பேருந்துகளின் சேவை...

0 1777

84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 240 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதேபோல் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட அம்மா அரசு நடமாடும் 2 பணிமனைகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

image

சட்டப்பேரவையில் அண்மையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருந்தார்.

image இதற்கான நிதி ஒதுக்கீடும் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு இருந்தது.

இதனடிப்படையில் வாங்கப்பட்ட 240 புதிய பேருந்துகளை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments