மார்த்தாண்டம் நகை கடை கொள்ளையரை தேடி கேரளா சென்றது தனிப்படை 

0 1414

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 3 கிலோ தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை தொடர்பாக தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

பொன் விஜய் என்பவரது வீடு மற்றும் கடையில் நேற்றுமுன்தினம் இரவு,நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், மர்ம நபர் முகமூடி அணிந்திருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

image

இதையடுத்து 7 கிலோ மீட்டர் சுற்றுப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், ஒரு நபர் மட்டும் கொள்ளையில் ஈடுபட்டு, பின்னர் இரு சக்கர வாகனம், மற்றும் சொகுசு காரில் காத்திருந்த நபர்களுடன் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.image

 

இதையடுத்து தனிப்படை கேரளா விரைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மார்த்தாண்டம் சிலங்கா ஜுவல்லரியில் 150 சவரன் நகை கொள்ளையில் துப்புதுலங்காத நிலையில், அதே பாணியில் தற்போதும் நடந்திருப்பதால், ஜூவல்லரி உரிமையாளர்கள் இரவில் நகைகளை டிஸ்பிளேயில் வைக்காமல் லாக்கரில் பூட்டி வைக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்



 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments