போலி ஆவணங்களை காட்டி வீடு கட்டியதாக மோசடி

0 986

செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், போலி ஆவணங்களைக் காட்டி முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் விளாங்காடு ஊராட்சியை சேர்ந்தவர் கண்ணன். இவரது சித்தப்பா மாரி என்பவருக்கு இதுவரையில் அரசு தொகுப்பு வீடு மற்றும் ஆணை எதுவும் இல்லாத நிலையில், மணிமாரி என்ற பெயரில் வீடு கட்டியதாகவும், அதற்கான அனைத்து தொகைகளும் வங்கியில் பரிமாற்றம் நடந்து விட்டதாகவும், அந்த தொகையில் வீடுகட்டியதாகவும் அரசு ஆவணத்தில் பதிய பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

image

இதே ஊராட்சிக்குட்பட்ட கோட்டைக் கயப்பாக்கம் கிராமத்தில் முருகன் என்பவரது பெயரிலும் வீடு கட்டியதாக மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

imageஇங்கு வசிக்கும் இருளர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் அனைத்து வீடுகளும் முறையாக முடிக்காமல் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்யாமல் அதிலும் சில வீடுகள் கட்டாமலே கட்டியதாக முறைகேடு நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

image

இந்த முறைகேடுகள் குறித்து தமிழக அரசும் மாவட்ட ஆட்சியரும் உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments