ஆஸ்கர் விருதுக்கு தேர்வானவர்கள் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி

0 624

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வானவர்கள் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓவ்வொரு வருடமும், உலகம் முழுவதும் வெளியாகும் திரைப்படங்களில் சிறந்து விளங்கிய திரைத்துறையினருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்டது.

image

அதன்படி பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்த ராபர்ட் டீ நீரோ (ROBERT DE NIRO), லியானார்டோ டீ காப்ரீயோ (Leonardo DiCaprio), பிராட் பிட் (Brad Pitt) உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் இதில் கலந்துக்கொண்டனர். இறுதியில் அவர்கள் அனைவரும் எடுத்துக்கொண்ட குழு புகைப்படமும் வெளியாகி உள்ளது.


SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments