வேகமாக சென்ற அரசுப் பேருந்து ஆட்டோவுடன் மோதிய விபத்தில் 23 பேர் உயிரிழப்பு

0 1103

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதியதுடன் அருகே இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்த கோர விபத்தில் 23 பேர் பலியாகினர்.

நாசிக்கில் இருந்து கல்யாண் நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று, மாலேகான் டியோலா சாலையில் மேசி பாடா எனுமிடத்தில் நேற்று மாலை வந்தபோது முன்பக்க சக்கரத்தின் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது.

image

 இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அந்த பேருந்து, அவ்வழியே வந்த ஆட்டோவுடன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் பேருந்தும், ஆட்டோவும் சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.

இதுகுறித்த தகவலின்பேரில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீஸார் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்து, ஆட்டோ ஆகியவற்றை நீண்ட நேரம் போராடி கிரேன் மூலம் அவர்கள் வெளியே கொண்டு வந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments