நகைச்சுவை நடிகரான குனால் காம்ராவுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா விமான சேவைகளைப் பயன்படுத்த தடை

0 1350

விமான பயணத்தின்போது தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியிடம் அத்துமீறி நடந்து கொண்ட விவகாரத்தில், தங்களது விமானங்களில் பயணிக்க காமெடி நடிகர் குணால் கம்ராவுக்கு ( Kunal Kamra) இன்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்கள் தடை விதித்துள்ளன.

மும்பையில் இருந்து லக்னோ சென்ற இன்டிகோ விமானத்தில் பயணித்த கோஸ்வாமி அருகே சென்று கேள்விகளை எழுப்பி கம்ரா இடையூறு செய்த வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து, சக பயணியை இடையூறு செய்ததற்காக தங்களது விமானங்களில் பயணிக்க கம்ராவுக்கு இன்டிகோ நிறுவனம் 6 மாதம் தடை விதித்தது.

இதேபோல் பிற நிறுவனங்களும் தடை விதிக்க வேண்டுமென மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி (Civil Aviation Minister Hardeep Singh Puri )கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து அடுத்தக்கட்ட அறிவிப்பு வரும் வரை கம்ராவுக்கு தங்களது விமானங்களில் பயணிக்க ஏர் இந்தியா நிறுவனமும் தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments