தங்கள் காதல் நிறைவேற இளம்பெண்ணை படுகொலை செய்த காதல் ஜோடி

0 1339

உத்திரப்பிரதேசத்தில், காதல் ஜோடி ஒன்று, தங்களுக்கு திருமண ஆசை சிக்கலின்றி நிறைவேற, இளம்பெண் ஒருவரை படுகொலை செய்து எரித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நொய்டாவில் உள்ள ஜார்ச்சா (Jarcha) பகுதியைச் சேர்ந்த பூனம் என்ற இளம்பெண், அங்குள்ள மொபைல் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி, கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்த போலீசாரின் விசாரணையில், அவரோடு பணியாற்றிய, புலந்த்சாகர் (Bulandshahr) பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் கபில் (Kapil) என்பவரும், ரூபி சர்மா(Ruby Sharma) என்ற இளம்பெண்ணும் சிக்கினர்.

தங்கள் காதலுக்கு ரூபி வீட்டில் எதிர்ப்புக் கிளம்பியதால், பூனத்தை காதலிப்பதுபோல் நடித்து, மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று, படுகொலை செய்து எரித்ததோடு, அதன் அருகில், ரூபியின் உடைகள், அணிகலன்களை வைத்து நாடகமாடியதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments