கியூபா மற்றும் ஜமைக்காவில் பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை

0 968

கியூபா மற்றும் ஜமைக்கா இடையே அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர நிலநடுக்கங்களையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 7 ஆகவும் 6 புள்ளி 1 ஆகவும் இரண்டு நிலநடுக்கங்கள் கியூபா மற்றும் கேமேன் தீவு பகுதிகளில் பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

image

நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலைகள் தாக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக ஜமைக்கா மற்றும் மியாமியில் மக்கள் பீதியால் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியேறினர்.

image

தொலைதூரத்தில் உள்ள புளோரிடாவிலும் சுனாமி எச்சரிக்கையால் அச்சம் காணப்பட்டது. 300 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் சுனாமி அலைகள் மிகப்பெரிய அளவில் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் ஆபத்து நீங்கியதாக சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. ஆயினும் இந்த நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments