நடிகர் சந்தானம் பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தால் படம் வெளிவரும் - தயாரிப்பாளர் ராஜன்

0 2192

நடிகர் சந்தானத்தின் பிடிவாதம் காரணமாக, ஓடி ஓடி உழைக்கனும் படம் பாதியில் நிற்பதாகவும், படத்தின் தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் ராஜன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்  

நடிகர் சந்தானத்தின் டகால்டி மற்றும் சர்வர் சுந்தரம் ஆகிய இரு படங்களையும் ஒரே நாளில் வெளியிட இருந்த சூழலில் இரு தயாரிப்பாளர்களுக்கும் சமரசம் செய்து வைத்த பாரதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர் சங்க கூட்டுக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய பாரதிராஜா, தன்னை பார்த்ததும் இரு தயாரிப்பாளர்களும் கத்திகளை கீழே போட்டு விட்டதாக தெரிவித்தார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும் போது, சந்தானம் கதாநாயகனாக நடித்துவரும் ஓடி ஓடி உழைக்கணும் என்ற படம் சம்பள பிரச்சனையால் பாதியில் நிற்பதால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட இயலாமல் படதயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தானம் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தால் படம் வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

டகால்டி படம் வருகிற 31ந்தேதியும், சர்வர் சுந்தரம் படம் பிரவரி 14 ந்தேதியும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments