தேர்வர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்குமா TNPSC ?

0 1402

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் முறைகேடுகள் டிஎன்பிஎஸ்சி மீதான தங்களின் நம்பிக்கையை தகர்த்து வருவதாக தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து, குரூப்-2 ஏ, குரூப் 1 தேர்வு என்று கிணறு வெட்ட பூதம் கிளம்புவது போன்ற முறைகேடு புகார்களால் ஏழை, எளிய தேர்வர்களின் பெருங்கனவு கலைந்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்வுகள் மட்டுமல்லாமல் 2017, 2012 என முந்தைய தேர்வுகளிலும் முறைகேடு புகார்கள் சங்கிலித்தொடர் போல் நீள்வதால், தேர்வுக்கு தயாராகும் மற்றும் தேர்வு எழுதி தோல்வியுற்றதாகக் அறிவிக்கப்பட்ட மாணவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

சரியான உணவின்றி, தூக்கமின்றி, அரசு வேலை என்ற பெருங்கனவை நோக்கிய பல லட்சம் தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். நாட்டிலேயே, ஒரு மாநில அரசு நடத்தக்கூடிய தேர்வுகளில் 20 லட்சம் பேர் எழுதக்கூடிய மிகப்பெரிய போட்டித் தேர்வாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் உள்ளன.

ஏழை, எளியவர்களின் அரசு வேலை என்ற கனவுக்கு உயிர் தரும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில், குளறுபடிகள் நடப்பதால் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக குமுறுகின்றனர் தேர்வுக்கு "முறையாக" தயாராகி வரும் தேர்வர்கள். 

இனி தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் தராமல் நடைபெறும் என்ற நம்பிக்கையை தேர்வாணையம் தரத் தவறும் பட்சத்தில், திறமையான, நேர்மையான அரசு அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பற்றாக்குறை நிலவும் என்று பயிற்சி மையங்களை நடத்துபவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடுவது, தேர்வு முறையில் மாற்றங்கள் என பல அதிரடிகளை மேற்கொண்டுள்ள டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments