காதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை..! எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்

0 3572

பார்ப்பதற்கு சிம்ரன் கொஞ்சம் திரிஷா கொஞ்சம் போல நடிகை ப்ரியா பவானி சங்கர் இருப்பதாக எஸ்.ஜே .சூர்யா வர்ணித்து டுவிட் போட்டதால் பதறி போய் தனக்கு கல்லூரி காலத்தில் இருந்தே காதலன் இருப்பதாக இன்ஸ்டா கிராமில் பகிரங்க படுத்தி கவிதை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர்..!

வாலி, குஷி, நியூ என இளைஞர்களை குறிவைத்து படங்களை இயக்கிய எஸ்.ஜே சூர்யா தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அண்மையில் நடிகை ப்ரியா பவானி சங்கருடன் ஜோடியாக நடித்த எஸ்.ஜே சூர்யாவின் மான்ஸ்டர் படம் வெற்றி பெற்றதால், மீண்டும் இருவரும் பொம்மை என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக, தனக்கு ராசியான நடிகை சிம்ரன் என்று கூறிவந்த எஸ்.ஜே சூர்யா, தற்போது பிரியா பவானி சங்கரை ராசியான நடிகை என புகழ்ந்து டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

பொம்மை படத்தில் தன்னுடன் ப்ரியா பவானி சங்கர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிம்ரன் கொஞ்சம், திரிஷா கொஞ்சம் என்று டுவிட்டரில் வர்ணித்திருந்தார்

தொடர்ச்சியாக இரு படங்களில் ஜோடி..! டுவிட்டரில் வர்ணனை..! இதையெல்லாம் பார்த்த சினிமா உலகினர் இருவரும் காதலித்து வருவதாக கொழுத்தி போட அதிர்ச்சி அடைந்தார் ப்ரியா பவானி சங்கர்.

காதல் கிசு கிசுவுக்கு டுவிட்டரில் மறுப்பு தெரிவித்தார் எஸ்.ஜே சூர்யா. அதில், தான் ப்ரியா பவானி சங்கரிடம் காதலை தெரிவித்ததாகவும், அதற்கு அவர் தன்னை நிராகரித்ததாகவும் சிலர் ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருவதாக கூறியிருந்தார். பிரியா பவானிசங்கர் திறமையான நடிகை, எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய இது போன்ற தகவலை பரப்பாதீர்கள் என்று தெரிவித்திருந்தார் எஸ்.ஜே சூர்யா..!

இந்த நிலையில் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள ப்ரியா பவானி சங்கர், தனக்கு ஏற்கனவே கல்லூரி காதலன் இருப்பதை உறுதி படுத்தி இன்ஸ்டாகிராமில் கவிதை ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 10 வருடத்திற்கு முன்பாக கல்லூரியில் சராசரி அழகுடன் இருக்கும் போதே தன் மீது காதல் கொண்டு தெரிவித்தவன் அவன் என்றும் தற்போது புதிதாக இருக்கும் தன்னை அதே அன்பு மாறாமல் தன்னுடன் இருப்பது ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது, சிதைந்து போனவற்றை மனம் உடைந்த ஒருவன் தேர்ந்தெடுப்பது என்பது எளிதான விஷயமல்ல என்று ஆச்சர்யத்துடன் குறிப்பிட்டுள்ளா ப்ரியா பவானி சங்கர், தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவள் வாழ்க்கையில் அவனை போல ஆண் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுவதாக கூறி தனது காதலனுடன் இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அதற்கு சில ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் சிலர் அய்யோ அப்படி சொல்லாதீங்க...! என்று கமெண்ட்டில் கவலை தெரிவித்துள்ளனர்.
டுவிட்டரில் பற்றவைக்கப்பட்ட காதல் வதந்தீயை, இன்ஸ்டாவில் கவிதை எழுதி கல்லூரி காதலனால் அணைத்திருக்கிறார் ப்ரியா பவானி சங்கர் என்று கூறும் நெட்டிசன்கள், 60ஸ் கிட்டான எஸ்.ஜே சூர்யா கடைசிவரை சிங்கிள் தான் போல என்றும் கலாய்த்து வருகின்றனர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments