அரையாண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் - “ஒருநாள் தலைமை ஆசிரியை” பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்ட மாணவி
திருவண்ணாமலை அருகே அரசு பள்ளியில் அரையாண்டு தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, 'ஒரு நாள் தலைமையாசிரியர்' பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
நெசல் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், அரையாண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுபவர்கள் ஒரு நாள் தமது பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
அரையாண்டுத் தேர்வில் 500க்கு 447 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த 10ஆம் வகுப்பு மாணவி மதுமிதா, திங்கட்கிழமை “ஒருநாள் தலைமை ஆசிரியராக” பதவியேற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
ஆசிரியர்கள் அவருக்கு சால்வை அணிவித்து, தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரவைத்தனர். பின்னர் அவர் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தல், வகுப்பறைகளுக்குச் சென்று பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார்.
Comments