மின்சார காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்

0 1079

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் மின்சார காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மூன்று விதமான மாடல்களில் அந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. வரிகளுக்கு முந்தைய ஆரம்பகட்ட ஷோரூம் விலையாக 14 லட்சம் ரூபாயிலும், உச்ச விலையாக 16 லட்சம் ரூபாயிலும் விற்பனை செய்யப்படுகிறது.

9.9 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட முடியும் என்றும், விரைவான டிசி சார்ஜர் முறையில் ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்ற முடியும் என்றும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று சான்றிக்கப்பட்டுள்ளது. டாடா பவர் நிறுவனம் 100 சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைத்துள்ள நிலையில், வரும் மார்ச் மாதத்திற்குள் அதன் எண்ணிக்கையை 300 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments