கொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா ? தமிழக சுகாதாரதுறை ஆய்வு

0 3218

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வழி தெரியாமல் சீனா தவித்து வரும் நிலையில், வைரஸை கட்டுப்படுத்த தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள மருந்தை ஆய்வுக்கு  அனுப்பி வைக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவே நிலைகுலைந்து போயுள்ளது. அதனை கட்டுப்படுத்த வழி தெரியாமல் சீனர்கள் விழிபிதுங்கி போயுள்ளனர். இந்த நிலையில் சென்னை அரும்பக்கத்தை சேர்ந்த சித்த மருத்துவர் திருதணிகாசலம் என்பவர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட மருந்தை தான் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸுக்கு சித்த மருத்துவர் மருத்து கண்பிடித்திருப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டபோது, அந்த மருந்தை ஆய்வு செய்து, அந்த மருந்தால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இயலுமா என்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சித்தமருத்துவர் கண்டுபிடித்துள்ள ஆயுர்வேத மருந்தை ஆய்வு எடுத்து செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சித்த மருத்துவர் சொன்னபடி இந்த ஆயுர்வேத மருந்தால் சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இயலும் என்று நிரூபிக்கப்பட்டால் உலக அரங்கில் தமிழனின் பெருமை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments