முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதா... மத்திய குழு அளித்த பதில் என்ன..?
முல்லை பெரியாறு அணையில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அணையை கண்காணிக்கவும், பராமரிக்கவும் மூவர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. ஆண்டு தோறும் அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்வது இக்குழுவின் பணியாகும்.
இந்த நிலையில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்ஷன் ராஜ் தலைமையிலான மூவர் குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் மற்றும் கேலரி பகுதிகளில் தமிழக - கேரள பிரதிநிதிகளுடன் ஆய்வு செய்யப்பட்டது.
அதைதொடர்ந்து நடந்த ஆலோசனக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குல்ஷன் ராஜ், அணை பலமாக இருப்பதாகவும், பேபி அணை பலப்படுத்தப்பட்ட பிறகு பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Comments