ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது

0 2464

நடப்பு ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற உள்ளவர்களில் ஒருவர் கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் ஆரஞ்சு பழ வியாபாரி.

தட்சிண கன்னடாவைச் சேர்ந்த ஹர்கலே கஜப்பா நியூபேடபூ கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் மங்களூரில் தெரு,தெருவாக ஆரஞ்சு பழம் விற்பனை செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டு பயணிகள் அவரிடம் ஆரஞ்சு வாங்க வந்தனர்.

ஆனால் ஆங்கிலம் தெரியாத தால், அவர்கள் வாங்காமலேயே சென்று விட்டனர். இதனால் வருத்தம் அடைந்த கஜப்பா, பள்ளிக்கூடமே இல்லாத தமது சொந்த ஊரில் தன் சொந்த செலவில் 2000 ஆம் ஆண்டில் பள்ளிக்கூடம் தொடங்கினார்.

ஆரஞ்சு பழம் விற்ற காசில் இருந்தும், கடன் வாங்கியும் அவர் அந்த பள்ளியை நடத்தி வருகிறார். இதனால் அந்த கிராமத்தில் இப்போது கல்வி கற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவரது தன்னலம் கருதாத சேவையை மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது மூலம் அங்கீகரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments