குயின்ஸ்லேண்டில் கொட்டித்தீர்க்கும் கனமழை - சிட்னியில் தகிக்கும் வெப்பம்
ஆஸ்திரேலியாவில், புதர் தீயின் தாக்கம் மீண்டும் வேகமெடுத்திருப்பதால், கான்பரா உள்ளிட்ட நகரங்களில் வசிப்போருக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கான்பராவின் நாமாட்கீ(Namadgi) தேசிய பூங்காவில் புதர் தீயில், சுமார் 8,000 ஏக்கர் பரப்பிலான வனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இதற்கிடையே, குயின்ஸ்லேண்டு மாகாணத்தின் வடக்குப் பகுதியில், கனமழை கொட்டித்தீர்த்ததோடு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். பல இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
அதேநேரத்தில், ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வரையில், வெப்பம் தகிப்பதால், பொதுமக்கள் சொல்லொண்ணா துயரில் தவிக்கின்றனர்.
Comments