10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கேள்விகள் எப்படி கேட்கப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம் பதில்
10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் எப்படி வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படலாம் என்பதால் புத்தகம் முழுவதையும் படித்து தேர்வுக்கு தயாராகுமாறு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
புதிய பாடத்திட்டத்தின் படி 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதற்கான அட்டவணை மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், Blue Print வெளியிடப்படாததால் எவ்வகை கேள்விகள் கேட்கப்படும் என மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.
இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், Blue Print தேவையில்லை என்பது அரசின் கொள்கை முடிவு எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால் மாதிரி வினாத்தாளில் உள்ளபடி கேள்விகள் கேட்கப்படவில்லை என யாரும் உரிமை கோர முடியாது எனவும், புத்தகத்தின் எந்தப் பகுதியில் இருந்து வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு மாணவர்களை தயார் செய்யுமாறு ஆசிரியர்களுக்கும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments