ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு ரோஜர் பெடரர் முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில், அரையிறுதி போட்டிக்கு சுவிட்சர்லாந்தின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார்.
மெல்பேர்னில் நடைபெற்ற ஆடவர் காலிறுதி போட்டியில், பெடரரும் அமெரிக்க வீரர் டென்னிஸ் சான்ட்கிரெனும் (Tennys Sandgren) மோதினர். இதில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் பெடரர் கைப்பற்றிய போதிலும், அடுத்த 2 செட்டுகளையும் அமெரிக்க வீரர் 2-6, 2-6 என்று தனதாக்கினார். இதனால் போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
இருப்பினும் பெடரர் சிறப்பாக விளையாடி அடுத்த 2 செட்டுகளையும் 7-6, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி வென்றார். இந்த வெற்றியின்மூலம், அரையிறுதி போட்டிக்கு அவர் முன்னேறினார்.
Comments