9 மாத குழந்தையை 5 லட்ச ரூபாய்க்கு விற்ற பெற்றோர்

0 1024

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 9 மாத ஆண் குழந்தை, 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

பெரியகல்லுவயலைச் சேர்ந்த காடப்பன் செல்வி தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

image

அந்த ஆண் குழந்தையை பிறந்து நான்கு நாட்களிலேயே ஐந்து லட்ச ரூபாய்க்கு பெற்றோர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரை அடுத்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்த சென்ற போது, அந்த தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு தலைமைறைவானது தெரியவந்தது.

இது தொடர்பாக திருமயம் காவல்நிலையத்தில் அதிகாரிகள் புகார் கொடுத்ததையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments