சேலம் கால்நடைப் பூங்காவுக்கு பிப்ரவரி 9ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்
சேலம் தலைவாசலில் அமையும் பிரம்மாண்ட கால்நடைப்பூங்காவுக்கு வரும் 9ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட இருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற துறை ரீதியான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலத்தில் 9ம் தேதி நடைபெறும் முதற்கட்ட கால்கோள் விழாவை தொடர்ந்து 2 நாட்களுக்கு கால்நடைகளுக்கான சிறப்பு திருவிழா நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.
Comments