வில்சன் கொலையில் 2 பயங்கரவாதிகளிடம் NIA விசாரணை

0 1207

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான இரு பயங்கரவாதிகளை, அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச்சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

வில்சன் கொலையில் கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இரு பயங்கரவாதிகளை காவலில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் வைத்து கடந்த இரு நாட்களாக விசாரித்தனர்.

இன்று இருவரையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

அப்துல் சமீமை தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் உள்ள வீட்டுக்கும், தவ்பீக்கை கோட்டாறு இலங்கடையில் உள்ள வீட்டிற்கும் தனித்தனியாக பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று, நேரில் சோதனையிட்டு விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments