கொரோனோ போன்ற வைரஸ் பரவலாம் என 2 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்த பில் கேட்ஸ்

0 1216

கொரோனோ போன்ற வைரஸ் தாக்குதல்கள் ஏற்படலாம் என 2 ஆண்டுகளுக்கு முன்னரே மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்திருந்த தகவல் வெளியாகியுள்ளது.

பருவநிலை மாற்றம், அணுஆயுதப் போர் ஆகியவற்றுடன், வைரஸ் தாக்குதல்கள் மனிதகுலத்திற்கே அச்சுறுத்தலாக உருவாகக் கூடும் என கடந்த 2017ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

போருக்கு தயாராவது போல, உயிரியல் அச்சுறுத்தல்களுக்கும் தயாராக வேண்டும் என்றும் பில்கேட்ஸ் அப்போது வலியுறுத்தியிருந்தார்.

உலக பணக்காரரும் மென் பொருள் அறிஞருமான பில் கேட்ஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 100 மில்லயன் ரூபாய் ( இந்திய மதிப்பில் சுமார் 10கோடி) நிதியாக அளித்துள்ளார். பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி பெயரில் இயங்கும் ''பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்  அறக்கட்டளை'' சார்பில் இந்த தொகை வழங்குவதாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு உதவவும் தனிப்பட்ட அரசாங்கங்கள் மட்டுமல்லாது அந்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் , பலதரப்பட்டவர்கள் சேர்ந்து உழைக்க வேண்டும் எனவும். பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல் அவர்களுக்கான சிகிச்சையை  துரிதப்படுத்துதல் போன்ற வேலைகளை சீன அரசும், உலக சுகாதார அமைப்பும் அதற்கான உதவிகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் அந்த அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி 'மார்க் சுஸ்மான்' அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

மேலும் அதற்கு உதவியாக தங்கள் அறக்கட்டளை சார்பில் 100 மில்லியன் வரை வழங்க இருப்பதாகவும், அந்த தொகையை உலக சுகாதார மையம், சீனா மற்றும் பாதிக்கப்பட்ட மற்ற நாட்டு பொது சுகாதார துறைகளுக்கு அனுப்பப்படும் எனவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பில்கேட்ஸ் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments