ஓரினச்சேர்க்கை இணையர், தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமானதாக பதிவுச் செய்யக்கோரி வழக்கு
கேரளாவைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கை இணையர், தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமானதாக பதிவுச் செய்யக்கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த நிகேஷ் பீ.பீ (Nikesh PP) மற்றும் சோனு எம்.எஸ் (Sonu MS) ஆகிய ஓரினச்சேர்க்கை இணையர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால், அதை அங்கீகரிக்க, கோவில் நிர்வாகங்கள் மறுத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்மாதிரியாக கொண்டு, தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்திட உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் (Anu Sivaraman), ஓரினச்சேர்க்கை இணையரின் மனு குறித்து பதிலளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Comments