உருளைக்கிழங்கு உற்பத்தி உயர்வு - பிரதமர் மோடி

0 955

அரசின் கொள்கைமுடிவுகள், தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் உருளைக்கிழங்கு உற்பத்தி 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 3ஆவது உலக உருளைக் கிழங்கு உற்பத்தியாளர் சம்மேளனம் நடக்கிறது. அதை ஒட்டி காணொலிகாட்சி வாயிலாக உரையாற்றிய மோடி, தேசிய அளவில் 20 சதவிகிதமாக அதிகரித்துள்ள உருளைக் கிழங்கு உற்பத்தி, குஜராத் மாநிலத்தில் 170 சதவிகிதம் என்ற பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டியுள்ளதாக பெருமையுடன் கூறினார்.

உருளைக்கிழங்கை சேமித்து வைக்க உலகத் தரத்திலான கிடங்கு வசதிகள்  குஜராத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், வருடம் முழுதும் காய்ந்து கிடந்த நிலங்கள் இன்று நவீன நீர்ப்பாசன தொழில்நுட்பத்தின் உதவியால் பலன்தரும் விவசாய நிலங்களாக மாறி விட்டதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments