நான் செய்த மிகப் பெரிய தவறை நீங்களும் செய்யாதீங்க.. நடிகர் கார்த்தி
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகர் கார்த்தி, தாம் பார்த்தவரை நினைத்த விஷயத்தை சீக்கிரம் அடைந்து சாதித்தவர்களுக்கு அதன் பிறகு வெறுமை ஒன்றே மிஞ்சும்.
அந்த நிலையில் அடுத்தவர்களுக்கு கொடுப்பதில் தான் சந்தோஷம் இருக்கும். மேலும் நான் செய்த தவறு ஒன்றை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் அடிக்கடி செய்த மிக பெரிய தவறு என்னை மற்றவருடன் ஒப்பிட்டு கொண்டே இருந்தேன்.
இது நான் செய்த பெரிய தவறாக நினைக்கிறன். எந்நேரமும் யாருடனாவது உங்களை கம்பேர் செய்து கொண்டே இருக்காதீர்கள். நாம் யாருக்கு கீழேயும் இல்லை, யாருக்கும் மேலேயும் இல்லை. அதே போல நாம் யாருக்கும் சமமானவர்களும் இல்லை. நாம் தனி என்று நினைத்து கொள்ள வேண்டும்.
நாம் எப்போதுமே தனித்துவம் கொண்டவர்கள் என்று நினைத்து கொள்ளுங்கள். எனவே வாழ்க்கையில் எந்த காரணத்தை கொண்டும், எந்த சூழலிலும் மற்றவருடன் உங்களை ஒப்பிட்டு கொள்ளாதீர்கள். நமக்கு கிடைக்காத ஒரு விஷயம் இன்னொருவருக்கு கிடைக்கும் போதும், மற்றவரின் வெற்றிக்காகவும் சந்தோஷப்படுங்கள்.
எத்தனையோ சிக்கல்களுக்கிடையே தான் நாம் ஒவ்வொருவரின் வாழ்வும் நகர்கிறது. இதில் அடுத்தவரின் வெற்றிக்கு நாம் மகிழ்வோமானால் நம் மனது லேசாகிவிடும். வாழ்வில் தேடல் என்பது மிக அவசியம். குறிப்பாக திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் வாழ வேண்டும்.
குழந்தை என்று பிறந்து விட்டால் அதை சிறப்பாக வளர்க்கவே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இதை என் தந்தை கூட எனக்கு சொல்லி கொடுக்கவில்லை. நன்றாக படி, நல்ல வேலைக்கு போ, நன்றாக சம்பாதி என சொல்லி முடித்து கொண்டார்கள். ஆனால் அதோடு வாழக்கை முடியாது. குடும்ப வாழ்க்கை, தொழில் வாழக்கை என அனைத்திற்கும் சரியான நேரம் ஒதுக்க வேண்டும் என்று பேசினார்.
Comments