டோல்கேட் சூறையாடலின் போது ரூ.18 லட்சம் மாயமானதாக போலீசில் புகார்

0 1784

செங்கல்பட்டு அருகே பரனூர் டோல்கேட்டை தாக்கி சூறையாடியபோது, அலுவலகத்தில் இருந்த ரூபாய் 18 லட்சம் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26 ந் தேதி இங்கு அலுவலர்களுக்கும், அரசு விரைவு பேருந்து நடத்துனர், ஓட்டுனர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சுங்கச்சாவடி அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது.

image

இதுதொடர்பாக டோல்கேட் ஊழியர்களான ராஜஸ்தான் மற்றும் உ.பி.யைச்சேர்ந்த குல்தீப் சிங், விகாஸ் குப்தா, செங்கல்பட்டைச் சேர்ந்த முத்து, மற்றும் பேருந்து ஓட்டுனர் நாராயணன், நடத்துனர் பசும்பொன் முடியரசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

image இந்த நிலையில் இந்த சம்பவத்தின்போது டோல்கேட் அலுவலகத்தில் இருந்த ரூபாய் 18 லட்சம் ரொக்கப் பணம் மாயமானதாக, யாரையும் குறிப்பிடாமல் தற்போது தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments