பிரேசில் கனமழையினால் இதுவரை 46 பேர் பலி
பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பெய்த திடீர் கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து நேரிட்ட வெள்ளத்துக்கு 46 பேர் பலியாகியுள்ளனர்.
ரீயோ டி ஜெனிரோ, மினாஸ் கெராய்ஸ் (Minas Gerais), எஸ்பிரிடோ சான்டோ(Espirito Santo) உள்ளிட்ட மாகாணங்களில் புயல் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
இந்த இயற்கை சீற்றத்துக்கு 46 பேர் பலியாகியிருப்பதாகவும், 25 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments