மாஸ் ஹீரோக்களை வைத்து திரைப்படமா.! இயக்குநர் மிஷ்கின் பதில்
தன்னுடைய படத்தின் முதல் 10 ஷாட்களை கூர்ந்து பார்க்கும் ரசிகர்கள் அதன் பிறகு, தாங்களாகவே கதைக்குள் தம்மை பொருத்தி கொண்டுவிடுவார்கள் என இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், முதல் 10 ஷாட்களை பார்த்த பின்னர், ரசிகர்கள் அந்த படத்திற்கு ஏற்றவாறு உருவாகிவிடுவார்கள்.
அதற்கேற்றவாறு அவர்களுக்கு கேள்விகள் தோன்றும். படத்தை தொடர்ந்து பார்க்கும் போது அதனுடன் சேர்ந்து ரசிகர்களும் வொர்க் செய்வார்கள். அப்படித்தான் என் படத்தை நான் டிசைன் செய்திருப்பேன் என கூறினார். ஒரு காட்சியில் ஒருவர் அழுதால் ரசிகர்களும் அழ வேண்டும்.
காட்சியில் ஒருவர் சிரித்தால் ரசிகர்களும் சிரிக்க வேண்டும். அது தான் ஒரு இயக்குநரும், பார்வையாளரும் சரியாக கைகோர்த்து நடக்கிறார்கள் என்பதற்கான அடையாளம். எனது படம் எல்லாமே இருட்டில் துவங்கி கடைசி ரீலில், வெளிச்சத்தை தேடி வருவது போலவே இருக்கும். ஏனென்றால் கதைகள் என்றாலே இருட்டுக்கு சொந்தமானவை .
என்னை Dark Film Maker என்றழைத்தால் அது எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாராட்டாகவே பார்க்கிறேன். அதே போல ஒரு டைரக்டர், பட தயரிப்பாளராக மாறாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் நான் இரு படம் தயாரித்துளேன். டைரக்டர், தயரிப்பாளர் என இரு அவதாரம் எடுத்தால் சிக்கனம் பார்த்து படத்தை எடுக்கும் சூழல் வரும். அப்போது படத்தின் குவாலிட்டி நிச்சயம் சரியாக இருக்காது என்றார் மிஷ்கின்.
தான் இனமும் டிவி பார்ப்பதில்லை, பேப்பர் படிப்பதில்லை, பல தமிழ் சினிமாக்களை நான் பார்ப்பதில்லை. ஊரை உற்று நோக்க வேண்டுமே தவிர , ஊரோடு சேர்ந்து வாழ்ந்தால் கலைஞன் காணாமல் போய்விடுவான். அவனது உலகம் என்றும் தனியாகவே இருக்க வேண்டும். அதிகபட்சம் வருடத்திற்கு 4 திரைப்படங்கள் மட்டுமே பார்ப்பேன்.
மாஸ் ஹீரோக்களை வைத்து இயக்கும் எண்ணமே இல்லை. ஒரு மாஸ் ஹீரோவுக்கு மாஸான கதை இருந்தால் சொல்லலாம். இல்லை என்றால் அது என்னுடைய திரைப்பயணத்தை சிதைத்து விடும் என கூறினார் மிஷ்கின்.
Comments