'செபி' யின் விசாரணை வளையத்தில் Aptech நிறுவன தலைவர் ராகேஷ்
பங்கு சந்தை வர்த்தகத்தில், குடும்ப லாபத்திற்காக முறைகேடுகளில் ஈடுபட்டார் என்ற புகாரில் பிரபல கம்ப்யூட்டர் கல்வி நிறுவனமான ஆப்டெக்கின் தலைவர் ராகேஷ் ஜுன்ஜுஹன்வாலா ((Rakesh Jhunjhunwala )) மீது செபி எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணையை துவக்கி உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், ஆப்டெக்கின் பொருளாதார விவரங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி பங்கு வர்த்தகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதித்தார் என்பது புகார்.
இதில் ராகேஷ் ஜுன்ஜுஹன்வாலார அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆப்டெக் நிறுவனத்தின் சில இயக்குநர்கள் ஆகியோருக்கும் பங்கு இருப்பது குறித்த விசாரணையை செபி நடத்த உள்ளது.
கடந்த 2016 ல் ராகேஷின் சகோதரர் மற்றும் சகோதர ரின் மனைவி இருவரும் சேர்ந்து ஏழரை லட்சத்திற்கும் அதிகமான ஆப்டெக் பங்குகளை தவறான வழியில் வாங்கி 160 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் சம்பாதித்ததுள்ளதாக செபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments