பாரமுல்லாவில் லஷ்கரே தொய்பா பயங்கரவாதி கைது

0 818

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் லஷ்கரே தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புல்வாமாவின் அவந்திபோரா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கமாண்டர் உள்ளிட்ட பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில் பாரமுல்லாவின் ஆந்தர்கேம் பட்டான் பகுதியில் (Andergam Pattan area of Baramulla)லஷ்கரே தொய்பா பயங்கரவாதியான 19 வயதான சாஜித் பரூக் தர் பதுங்கியிருப்பதாக போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அவனை சுற்றிவளைத்து இன்று அதிகாலை போலீஸார் கைது செய்தனர். ட்விட்டர் தளத்தில் இந்தத் தகவலை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments