’Man Vs Wild ’ நிகழ்ச்சியில் ரஜினி

0 1793

பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும், பேர் கிரில்சுடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

டிஸ்கவரி சேனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்தும் அதில் பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூர் அருகிலுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் 27ம் தேதி நண்பகலில் தொடங்கியுள்ளது.

முன்னதாக படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் பந்திப்பூர் சென்றடைந்தார்.

2 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பு 29ம் தேதி நண்பகலுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி வெகு விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments