மெரினா படகு வீடுகளில் தீ - 8 பேர் உயிரிழப்பு

0 703

அமெரிக்காவின் அலபாமாவில் மெரினா படகு வீடுகள் தீப்பற்றியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஸ்காட்ஸ்போரோ((Scottsboro)) நகரத்தில் டென்னசி((Tennessee)) நதி கரையோரம் கட்டப்பட்டிருந்த மரத்திலான படகு வீடுகளில் பொதுமக்கள் பலர் நிரந்தரமாகவும் சிலர் வார இறுதி நாட்களை கழிக்கும் பொருட்டும் வாடகைக்கு தங்கியிருந்தனர்.

image

இந்த நிலையில் நேற்றிரவு படகு ஒன்றில் திடீரென பற்றிய தீ, காற்றின் வேகம் காரணமாக மற்ற படகுகளுக்கும் படகுதுறைக்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

image

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து நாசமாகி ஆற்றில் மூழ்கின. அதில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். படகில் இருந்து ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றவர்களை தீயணைப்புத்துறை வீரர்கள் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments