ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் மீது தேச துரோக வழக்கு

0 3040

தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாமைத் தேடி மும்பை,டெல்லி, புனே உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில் ஷர்ஜிலுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அஸ்ஸாமை இந்தியாவை விட்டு துண்டித்து தனிநாடாக்க வேண்டும் என ஷர்ஜில் இமாம் போராட்டம் நடத்தியதையடுத்து அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவருடைய பேச்சு அடங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தலைமறைவாக உள்ள ஷர்ஜிலை போலீசார் தேடி வரும் நிலையில், அவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments