இந்திய வம்சாவளி பஞ்சாபி சகோதரர்களுக்கு சிறைத் தண்டனை

0 1286

இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மன்ஜிந்தர் சிங் தாக்கர் மற்றும் தவிந்தர் சிங் தாக்கர் ஆகியோர் பஞ்சாபை சேர்ந்தவர்கள். இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் இயங்கிய குற்றவாளிகளுடன் இணைந்து இவர்கள் இருவரும் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப் பொருட்களை கோழி இறைச்சியுடன் சேர்த்து நெதர்லாந்தில் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வாசிம் உசேன் மற்றும் நஸ்ரத் ஹூசேன் கடத்தல் கும்பலுடன் குற்றச்செயல்களில் ஈடுபட்டதை உறுதி செய்த பர்மிங்ஹாம் கிரவுன் நீதிமன்றம் தண்டனை விதித்தது.

வாசிமும் நஸ்ரத்தும் இணைந்து 44 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோழி இறைச்சியுடன் கோகய்ன், ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை அவர்கள் கடத்தியதாக நெதர்லாந்து குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments