பாகிஸ்தானில் இந்து கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் உடைப்பு - 4 பேர் மீது வழக்குப்பதிவு

0 1746

பாகிஸ்தானில் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் சிந்து மாகாணத்தில் சாக்ரோ என்ற நகரில் உள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவில் உள்ளது.

கடந்த ஞாயிறன்று இரவு இந்த கோவிலுக்குள் நுழைந்த 4 பேர் அங்குள்ள சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதையறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 4 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் மத ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனவே அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் அமைதி காக்க வேண்டும் என்று சிந்து மாகாண அரசு அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments