அமெரிக்க பல்கலைக்கழக வளாக குளத்தில் மூழ்கி இந்திய வம்சாவளி மாணவி உயிரிழப்பு

0 1317

அமெரிக்க பல்கலைக்கழக குளத்தில் 21 வயதான ஆன் ரோஸ் ஜெர்ரி என்ற இந்திய வம்சாவளி மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் தற்செயலாக குளத்தில் விழுந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்ரியை காணவில்லை என்ற புகாரையடுத்து போலீசார் பல்கலைக்கழக வளாகத்தில் தேடிய போது ஜெர்ரியின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

image

உடலில் காயங்கள் ஏதுமில்லாததால் இது ஒரு விபத்து என்றே போலீசார் கருதுகின்றனர். பியானோ வாசிப்பதில் சிறந்து விளங்கிய ஆன்ரோஸ் மிகவும் புத்திசாலியான மாணவி என்றும் பெயரெடுத்தவர். அவரது மரணம் சக மாணவர்களை அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் ஆளாக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments