குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு நிதி உதவி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்தரப்பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் போராட்டங்கள் நடத்த, கேரளாவை சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிதி உதவி செய்திருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் நிகழ்ந்த வன்முறையில் 20 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை அந்த அமைப்பு தொடர்புடைய வங்கி கணக்குகளில் மொத்தம் 120 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் தங்கள் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மறுத்துள்ளது.
Comments