நெற்பயிர்களில் நோய்த்தாக்கம்: ‘அச்சம் வேண்டாம்’ அதிகாரிகள்

0 751

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் நெற்பயிர்களை தாக்கியிருப்பது நெற்பழம் எனப்படும் ஒருவகை பூஞ்சை என்றும் அது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் வேளாண் அதிகாரிகள் கூறினர். 

சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை “லட்சுமி வைரஸ்” என்ற வைரஸ் தாக்கியுள்ளது குறித்து  செய்திகள் வெளியாகின. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வேளாண்துறை அதிகாரிகள் விவசாய நிலங்களை நேரில் ஆய்வு செய்ய வந்தனர். ப

யிர்களை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், நெற்பயிர்களை பாதித்துள்ளது நெற்பழம் என்ற பூஞ்சை என்றும், அதனால் மகசூலில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறினர். மகசூல் அதிகம் உள்ளபோதும், பருவ நிலை மாற்றத்தாலும், வயல்களில் தொடர்ச்சியாக ஈரப்பதம் உள்ளபோதும் இந்த பூஞ்சை பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments