CAA குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் - இந்தியா கடும் கண்டனம்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்ற தீர்மானங்களுக்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை தொடர்பாக, 6 தீர்மானங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீர்மானங்கள், நாளை மறுநாள் பிரஸ்ஸல்ஸில் கூட்டத்தில் விவாதத்திற்கு வருகிறது.இந்த தீர்மானங்களுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு பொது விவாதத்திற்குப் பிறகு ஜனநாயக வழிமுறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டதாக அரசு கூறியுள்ளது.
Comments