விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 14 பேருக்கு தானம்

0 1479

விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த சேலத்தை சேர்ந்த ஒருவரது உடல் உறுப்புகள் 14 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.

ராஜாராம் நகரை சேர்ந்த 50 வயதான சுரேஷ் என்பவர் மருத்துவ காப்பீட்டு முகவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19ஆம் தேதி காரில் சென்றுக் கொண்டிருந்த போது விக்கிரவாண்டி அருகே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

பின்னர் கோவை பீளமேடு அருகே உள்ள கே.எம்.சி.ஹெச் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சுரேஷ் மூளை சாவு அடைந்தார். அவரது மனைவி உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததை அடுத்து, தமிழ்நாடு உடல் உறுப்புதான ஆணையத்திடம் இதற்கான அனுமதி பெறப்பட்டது.

இதனையடுத்து கே.எம்.சி.ஹெச் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சுரேஷின் நுரையீரல், இதயம், கண்கள், சிறுநீரகம், தோல், எலும்பு மஜ்ஜை, கல்லீரல், கணையம் ஆகியவை எடுக்கப்பட்டன.

சிறுநீரகங்கள் தவிர மற்ற அனைத்தும் பிற தனியார் மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் 14 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments