கார்ப்பரேட் வரிவிதிப்பு இழப்பு ரூ.1 லட்சம் கோடியாக குறையும்
எட்டு சதவிகித வரி குறைப்பால், மத்திய அரசுக்கு வர வேண்டிய கார்ப்பரேட் வரியில் சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே இழப்பு ஏற்படும் என புதிய தகவல்கள் கூறுகின்றன.
இது நிதி நெருக்கடியில் உள்ள மத்திய அரசுக்கு செலவினங்களை சமாளிப்பதில் உதவிகரமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 30 சதவிகிதமாக இருந்த கார்ப்பரேட் வரி, புதிய தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் கடந்த செப்டம்பரில் 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.
இதை அடுத்து பட்ஜெட்டில் கூறியபடி 7.7 லடசம் கோடி ரூபாய் வர வேண்டிய இடத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைவு ஏற்படும்.
புதிய விதிகளின் படி, பழைய நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 22 சதவிகிதமாகவும், 2019 அக்டோபருக்கு பின்னர் பதிவு செய்யப்பட்டு 2023 மார்ச் மாத த்திற்கு முன்னர் உற்பத்தியைத் துவக்கும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதமாகவும் கார்ப்பரேட் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Comments