நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷ்சிங்கின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷ்சிங்கின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கெனவே நிராகரித்துவிட்டார்.
இந்நிலையில் கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக முகேஷ் சிங் கடந்த சனிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தான். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு அவனது வழக்கறிஞர், தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்ற நீதிபதி, வழக்கை பட்டியலிடுவது குறித்து பதிவாளரை அணுகுமாறு தெரிவித்துள்ளார். இன்னும் 4 நாட்களில் தூக்கிலிடப்பட உள்ள ஒருவரது மனுவை விட அவசரமானது எதுவுமில்லை எனவும் தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
Comments