நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சி

0 972

கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பராபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரும் அவரது சகோதரர் புகழ்சேட் என்பரும் தங்களது சோடா கம்பெனியை மேம்படுத்துவதற்காக அதே பகுதியை சேர்ந்த வசந்தா மற்றும் ஜானகியிடம், 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய நிலையில் அசலை விட கூடுதலாகவே வட்டி செலுத்தியதாக கூறப்படுகிறது.

image

ஆனால் கடன் கொடுத்தவர்களோ, கூடுதல் வட்டி கேட்டதுடன் அசலையும் உடனடியாக செலுத்துமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடன் வாங்கியவர்களின் மனைவிகளான கிருஷ்ணவேணியும், பாமாவும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர்.

image இதையடுத்து அங்கிருந்த போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் இரு பெண்களையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments