பொறியியல் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட பார்முலா ரக கார்களின் பந்தயம்
பொறியியல் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட பார்முலா ரக கார்களின் பந்தயம் கோவை செட்டிப்பாளையத்தில் நடந்தது.
கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 65 பொறியியல் கல்லூரி மாணவர் குழுக்கள் பங்கேற்றன.
அவர்களால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பார்முலா ரக கார்கள் போட்டியில் களம் கண்டன. ஒலி, மாசு அளவு, பிரேக் பிடிக்கும் திறன், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு சிறந்த கார்கள் தேர்வு செய்யப்பட்டன.
மின்சாரத்தில் இயங்கும் கார்களும் போட்டியில் பங்கேற்றன. தடைகள் மீது மோதாமல் லாவகமாக கார்கள் சென்ற விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Comments